Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களே… “நீங்க மட்டும் காளான சாப்பிடாதீங்க”… ஏன் தெரியுமா..?

வாழ்க்கையில் நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மழைக்காலங்களில் வெண்மையாக தென்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும் உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க ரத்தத்தை சுத்தப்படுத்த காளான் மிகவும் நல்ல மருந்து. மலச்சிக்கலை தீர்க்க காளான் பயன்படுகிறது. கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் செலினியம் சத்து அதிகரிக்கும். பற்கள், நகங்கள், தலைமுடி பிரச்சனை இருந்தால் அவற்றை உறுதிப்படுத்த காளான் நல்ல பயன் அளிக்கின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டுத்தன்மையை குறைக்கின்றது. ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலூட்டும் போது பெண்கள் காளான்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Categories

Tech |