Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்த இருப்பு 3,11,155…. தீவிரமாக நடைபெறும் முகாம்கள்…. ஆட்சியரின் தகவல்….!!

3,00,000 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் செய்தி குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வாரநாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்பின் சிறப்பு பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாக நேரில் சென்று செல்போன் எண்ணை கொண்டு அல்லது கோவிட் செயலின் மூலமும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து வருகின்றனர்.

இதனை அடுத்து தடுப்பூசிப் போட்டாதவர்களின் விவரங்கள் அனைத்தையும் பிரித்தெடுக்கும் பணியானது கலெக்டரின் அலுவலகத்தில் வைத்து பணியாளர்களின் மூலமாக நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 9,59,200 பேர் வசித்து வருகின்றனர். இவற்றில் இன்றைய நாள் வரை 7,89,507 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 5,70,710 நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 2,13,307 நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு இருக்கிறது. பின் தற்போது கையிருப்பில் 3,11,155 தடுப்பூசிகள் இருக்கின்றது. மேலும் 1,50,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

Categories

Tech |