மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தனது மோட்டார் சைக்கிளில் தாவுத்தாய் குளம் நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் நடராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.
இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.