மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரை மோட்டார் சைக்கிளில் திருமால்பூரிலிருந்து ஒச்சேரி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது துரை மோட்டார் சைக்கிளில் ஆயர்பாடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பலத்த காயமடைந்த துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் அவளுர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரையின் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.