நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்ட வீரர்களில் ஒருவரான ஸ்விட்சர்லாந்து வீரர் 19 வயதான ஜாசன் துபாஸ்குயர் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கினார். மற்றொரு மோட்டார் சைக்கிள், இவருடைய மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் , பல அடி தூரம் பல்டி அடித்து கீழே விழுந்தார். இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை பகுதியில் ஏற்பட்டிருந்ததால்,அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவருடைய மறைவு மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.