Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் கூட தானடா வந்த… நண்பன்கிட்டயே இப்படி பண்ணிட்டியே.. சேலத்தில் நடந்த சம்பவம் ..!!

நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார்.     இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார்.

இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் சைக்கிளை திருடி விட்டு பின் தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து செல்வம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தங்கவேலுவை கைது செய்ததோடு, பின் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்,

Categories

Tech |