Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இங்க இருந்ததை காணும்…. வாலிபர்கள் செய்த செயல்…. மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் அமைந்துள்ளது. இந்நிலையில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் ஷோரூமை பூட்டி சென்றுள்ளனர். அதன்பிறகு மறுநாள் காலை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் காயத்ரி கார்டன் பகுதியில் இருக்கும் ஒரு சிமெண்ட் மூட்டைகள் குடோனில் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் நின்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் மற்றும் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |