மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பதும், விக்னேஷ் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.