தனி நபராக இருந்து பல மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல் துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் புங்கனூர் பகுதியில் வசிக்கும் கிரிநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் தனிநபராக இதுவரை 39 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரிநாதனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 39 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.