Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருந்த குற்றவாளி…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் பெரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது 2 பேர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறை சென்று வந்தது உறுதியானது.

இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வான் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் தங்கி வேலை பார்ப்பது போல நடித்து விஸ்வான் மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் ஏற்கனவே விஸ்வான் சிறை சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருந்த போது மேடவாக்கத்தில் வசிக்கும் குற்றவாளியான சூடாமணி என்பவருடன் விஸ்வானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் இணைந்து மோட்டார் சைக்கிளை திருடியுள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து விஸ்வான் கஞ்சா, பெண் என உல்லாசமாக வாழ்வை கழித்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் விஸ்வானிடமிருந்து 6 விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |