இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் புதுக்கோட்டைக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மது போதையில் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பின் புதுப்பட்டி செட்டி ஊரணிகரை அருகே சென்று கொண்டிருந்தபோது கார்த்திக் மற்றும் ராஜ்குமாரின் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் படுகாயமடைந்த கார்த்திக்கை சிகிச்சைக்காகவும், உயிரிழந்த ராஜ்குமாரை பிரேத பரிசோதனைக்காகவும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கார்த்திக்கும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைை ஏற்படுத்தியுள்ளது.