Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சீறிப்பாயும் வேகத்தில் செல்லும் “டிரையம்ப் ராக்கெட் 3 ஆர்” … விற்பனைக்கு தயார் ..!!

பிரீமியம் மோட்டார்சைக்கிள்  டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது  .

பிரீமியம் மோட்டார்  சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர  உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . 

Image result for triumph rocket 3

குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் குரூயிஸர் வகையைச் சேர்ந்தது. ஆனால் இரண்டு மாடலிலுமே ஒரே திறன் கொண்ட என்ஜினானது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  , டிரையம்ப் மாடல் மோட்டார் சை க்கிள்கள் 2,500 சி.சி. திறன் கொண்டது. இ தில் லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இது 3 சிலிண்டரைக் கொண்டது. 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது.

Image result for triumph rocket 3

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் திறன் 11 சதம் கூடுதலாக  அமைக்கப்பட்டுள்ளது . இது  221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மோட்டார் சைக்கிள்கள்  மணிக்கு 0 – 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.79 வினாடிகளுக்குள் சென்று விடும் என கூறப்படுகிறது .

Image result for triumph rocket 3

இந்த மோட்டார் சைக்கிளின்  என்ஜின் எடை குறைவானது. ஆகையால் ,  சீறிப் பாய்வதோடு மைலேஜும் கூடுதலாக தரும் என கூறப்படுகிறது . இதில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதிகள் உள்ளன.   மேலும் , மழை நேரத்தில் ஓட்டுவதற்கும், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கும், ஸ்போர்ட் மற்றும் ரைடர் என இரண்டு வசதிகள் உள்ளன. இந்நிலையில்  , டிரையம்ப் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை டி.எப்.டி. இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரை இதில் பயன்படுத்தியுள்ளது.

Image result for triumph rocket 3

மேலும்  ஸ்மார்ட்போனுடன் இணைப்பு ஏற்படுத்தும் வகையில் இதன் தொடுதிரை வசதி உள்ளது. இதில் 3 ஆர் மாடலில் ஒரே கம்பியில் வடிவமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உள்ளது.  இதோடு  இரண்டு மாடலிலுமே அலாய் சக்கரங்களைக் கொண்ட மாடலும் வந்துள்ளன. முன் சக்கரத்தில் டூயல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒரு டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.

Image result for triumph rocket 3

இந்த இரண்டு மாடல் மோட்டார்  சைக்கிளுமே இந்த ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் நவம்பர் 5-ம் தேதி முதல் நடைபெற உள்ள இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியில் வைக்கப்படவுள்ளது . அதன்பின் இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு முதலில் ஐரோப்பிய சந்தையிலும், பின்னர் அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |