மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார்
மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் ஜெயசிங்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட காவல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மோதிய லாரி யாருடையது என்பது தெரியவில்லை. எனவே விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை காவலர்கள் பெற்று விசாரித்து வருகிறார்கள் விபத்தில் பலியான ஜெயசிங் என்பவருடைய மனைவி பெயர் சைனி மற்றும் அவருக்கு 2 மகள்களும் உள்ளனர்.