Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே உஷார்….. இனி டெய்லி ரைடு….. 2 மணி நேரத்தில்…. 1,810 பேர் மீது வழக்கு….!!

வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின்  எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு தினந்தோறும் அபராதம் விதித்து அதற்கான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி,

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று வேலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாகன சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி எட்டு இடங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை வாகன பரிசோதனை நடத்தப்பட்டது. இதில்,

ஹெல்மெட் அணியாதவர்கள் ,  சீட் பெல்ட் போடாதவர்கள், வாகனத்தில் மூன்று பேராக வந்தவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் என சுமார் 1,810 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சோதனையானது இனி வரக்கூடிய காலகட்டங்களில் நாள்தோறும் நடைபெறும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |