வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இதையடுத்து இந்த சுமையில் இருந்து ஏதாவது வழி கிடைக்காதா? என்று வாகன ஓட்டிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியன் ஆயில் கிரெடிட் கார்டை இந்த வங்கி வழங்கி வருகிறது.
பயன்கள்:
இந்த கார்டை வைத்து பெட்ரோல் டீசல் மட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால், பில் கட்டணம் ஆகியவற்றிற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பெட்ரோல் டீசலுக்கானsurcharge இல் 1% சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
யாரெல்லாம் வாங்கலாம்?
இந்த கார்டு வாங்குவதற்கு 21 முதல் 60 வயது உடையவராக இருக்க வேண்டும். சுயதொழில் செய்வோருக்கு மட்டும் 65 வயது வரை அனுமதிக்கப்படுகிறது. சம்பளம் பபெறுபவராக இருந்தால் மாதம் குறைந்தது 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவோர் ஆக இருக்க வேண்டும்.
பெறுவது எப்படி?
இந்தியன் ஆயில் கிரடிட் கார்டு பெறுவதற்கு எச்டிஎஃப்சி வங்கிக்கு நேரடியாக செல்லலாம் அல்லது வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுபோக இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.