இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள் இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தபட்டும், அபராதங்கள் விதித்தும் ஹெல்மெட் அணிவதை மக்கள் பின்பற்றவில்லை. இந்நிலையில் மாற்று விதமாக யோசித்த உபி மாநிலம்,
அனைவரிடமும் ஹெல்மட் பயன்பாட்டை அதிகரிக்கும் வண்ணம் பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்றும், ஹெல்மெட் இல்லை எனில் பெட்ரோல் தரப்பட மாட்டாது என்ற அறிவிப்பை ஒட்டியுள்ளது. இம்முறை உபி மாநிலம் நொய்டாவில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் பெங்களூருவில் நாளை முதல் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.