சாலை விதிமீறல்களில் ஈடுபட்டால் வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகள் மீறலுடன் வாகன காப்பீட்டை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்காக அபராதம் செலுத்த நேர்ந்தால் அவை குறித்து தகவல்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு, வாகனத்துக்கான காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படும். அதிக விதிமீறலில் ஈடுபட்டால் காப்பீட்டு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பழைய விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.