Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தில் நின்ற மோட்டார்சைக்கிள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

காவல் நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சென்று மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் சாலை பகுதியில் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மயிலாடுதுறை காவல் நிலைய தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் காவல்நிலைய அலுவலக வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்தபின் கோடீஸ்வரன் தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தபோது தான் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் தனது மோட்டார் சைக்கிள் வேறு எங்காவது நிறுத்தி இருக்கின்றதா என்று போலீஸ்காரர் கோடீஸ்வரன் காவல் நிலையம் வளாகம் முழுவதும் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் சிறிது நேரம் குழப்பத்தில் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோடீஸ்வரன் அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். எனவே மயிலாடுதுறை காவல்நிலைய வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மகளிர் காவல் நிலையம் மற்றும் காவல் தொழில்நுட்ப அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில் ஒரு போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பகல் இரவு என 24 மணி நேரமும் இயங்கும் காவல் நிலைய வளாகத்துக்குள் பட்டப்பகலில் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை எடுத்து செல்வது என்றால் நிச்சயம் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யாராக இருக்கும் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |