மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சவுண்டம்மன் கோவில் பகுதியில் மருத்துவரான மோகன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தினமும் துடைத்து விட்டு அதில் வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளை துடைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது மோகன்ராஜின் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மோட்டார் சைக்கிளுக்குள் இருந்த கட்டுவிரியன் பாம்பை பிடித்து விட்டனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் பிடித்த கட்டுவிரியன் பாம்பினை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.