மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறிய விபத்தில் மின்வாரிய என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது மகாராஜா நகர் மாநகராட்சி பூங்கா அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த சசிகுமாரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.