Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நத்தமாடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் முருகேசன் திரும்பி வந்து பார்க்கும் பொழுது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முருகேசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |