மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வஞ்சிப்பாளையம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து ரஞ்சித் மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரஞ்சித் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியது எஸ்.வி.காலனி பகுதியில் வசிக்கும் வாசுதேவன் மற்றும் மணிகண்டன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது . இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.