Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனது குறித்து தர்மராஜ் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது 3 வாலிபர்கள் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தென்காசி தேவிபட்டணம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன், கார்த்திக் குமார், விக்னேஷ் என்பதும் மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |