மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாலையைப்பாளையம் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் பழனிசாமி அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து பழனிசாமி அவினாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.