வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அச்சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனில்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அனில்குமார் திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் ரயில்வே காலனியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அனில்குமார் தனது நண்பரான முருகன் என்பவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை இரவலாக வாங்கி கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அனில்குமார் உள்ள தனது வீட்டு வாசலின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
இதனையடுத்து அனில்குமார் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அனில்குமார் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குமரலிங்கம் பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.