மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிதம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் தாராபுரம் பகுதியில் கட்டிட வேலைகளை முடித்துவிட்டு காஞ்சிபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சிதம்பரம் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் பலத்த காயமடைந்த சிதம்பரத்தை உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிதம்பரம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குண்டடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.