மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரம் பகுதியில் முருக குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் குறுக்கே ஒரு மாடு வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருக குட்டி பலத்த காயமடைந்தார்.
இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் முருக குட்டியை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருக குட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.