Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள், லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரதீப் தனது உறவினரான பழனியம்மாள் மற்றும் பழனியம்மாள் மகன்களான சஞ்சய், சரவணன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூரிலிருந்து சோமனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் சுல்தான்பேட்டை அருகில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து பழனியம்மாளின் ஒரு கால் துண்டானது. அவருடைய மகன்களான சஞ்சய், சரவன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைபற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பழனியம்மாள், அவரது மகன்களான சஞ்சய், சரவணனை காவல்துறையினர் மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |