Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த காவலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம்-அம்பை சாலையில் சங்கரன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சங்கரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கரன் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சங்கரனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |