மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தராட்சி என்ற என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தராட்சி முதலைக்குளம் பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவில் பூமாலைகள் விற்பனை செய்துவிட்டு அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்துள்ளார். இந்நிலையில் முதலைக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் முருகன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுந்தராட்சி பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சுந்தராட்சியை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தராட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முருகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மற்ற மோட்டார் சைக்கிளில் வந்த பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் 17 வயதான 2 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.