Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுனு தெரியல… சிற்பிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிற்பி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் பெங்களூரில் உள்ள கோவில்களில் சிற்பங்களை செதுக்குபவரான காத்தலிங்கம், அருண்குமார் என்ற இருவர் வசித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில் காத்தலிங்கம், அருண்குமார் ஆகிய இருவரும் தங்களின் நண்பரான கவியரசை பார்க்க பணம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து பணப்பட்டியில் இருந்து சாக்கோட்டைக்கு செல்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கருநாவல் கொடி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த காத்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகிலுள்ளவர்கள் படுகாயமடைந்த அருண்குமார், கவியரசு ஆகிய இருவரையும் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |