மோட்டார் சைக்கிள் நிலைத் தடுமாறிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உடையார்பட்டி பகுதியில் இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ்குமார் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விக்னேஷ் குமாரின் மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விக்னேஷ் குமாரின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.