Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. வசமாக சிக்கிய சகோதரர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏகாம்பரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து ஏகாம்பரம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் பேரங்கியூர்-பைத்தாம்படி செல்லும் கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் முனுசாமியின் மகன்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெற்றிவேல் என்பதும், அவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் திருடி வந்தது என்பதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதில் ஒரு மோட்டார் சைக்கிள் ஏகாம்பரத்துக்கு சொந்தமானது என்பதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |