மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்குளம் பகுதியில் எபநேசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் எபநேசர் தேவநல்லூர் கால்வாய் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எபநேசர் களக்காடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.