மோட்டார் சைக்கிளை திருடிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு பேறை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கீழ வாணியங்குடி பகுதியில் வசிக்கும் தயாநிதி, பாலசுந்தரம் என்பதும் இவர்கள் இருவரும் இணைந்து மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்ததோடு மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.