Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பச்சை பெருமாள் புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |