மோட்டார் சைக்கிள் விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னக்கடை பகுதியில் பிரைட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரைட்சன் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மோட்டார் சைக்கிளில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பிரைட்சனுடன் அவரது நண்பரான பெரியக்கடை பகுதியில் வசிக்கும் ஷெல்டன் என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சராகி முன்னால் சென்ற ஷெல்டனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரைட்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஷெல்டன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.