மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லியோடு பகுதியில் ரஞ்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கண்ணுமாமூடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து மனு மூவோட்டுகோணம் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற காரில் மோட்டார்சைக்கிள் உரசியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள சுவரின் மீது மோதிய விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் மனுவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மனு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பளுகல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.