மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னமோளரப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பாக்கியம் தனது சகோதரி மகன் சிவசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராத விதமாக பாக்கியம் தவறிக் கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பாக்கியத்தை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக பாக்கியத்தை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குண்டடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.