மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சூரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி பொன்னையாபுரம் பகுதியில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார். இதனையடுத்து சக்தி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பொன்னையாபுரம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நாய் திடீரென மோட்டார் சைக்கிளின் குறுக்கே பாய்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.