Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி சந்தியா நகர் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசங்கர் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் வளாகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.

அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஜெயசங்கர் குலசேகரப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |