Categories
உலக செய்திகள்

பள்ளியின் கழிவறைக்குள் நுழைந்த மலைச்சிங்கம்… பதறியடித்து ஓடிய மாணவர்கள்… பிரேசிலில் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் ஒரு மலைசிங்கம் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு தொடக்கப் பள்ளியின் கழிவறைக்குள் பூமா என்ற மலைச்சிங்கம் திடீரென்று நுழைந்திருக்கிறது. மேலும், அந்த சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்த  மாணவர்களை நோக்கி கர்ஜித்தவுடன், மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் அந்த மலைசிங்கத்தை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டிருக்கிறார்கள். எனினும், அந்த பள்ளியில் பரபரப்பு அடங்கவில்லை.

Categories

Tech |