மோவாய் சிலைகள் காட்டுத்தீயால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
சிலி நாட்டில் பொலிநேசியன் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்குள் ஈஸ்டர் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் விசித்திரமான முக அமைப்பு கொண்ட நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மோவாய் சிலைகள் என அழைக்கப்படுகின்றன.
உலகப் புகழ்பெற்ற இந்த சிலைகள் தற்போது ஆபத்தின் விளிம்பில் உள்ளது. இதற்கு காரணம் ஈஸ்டர் தீவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீ தான். வேகமாக பரவி வரும் இந்த காட்டுத்தீ மோவாய் சிலைகள் பலவற்றை சேதப்படுத்தி உள்ளன. இந்த சேதத்திற்கு சிலி அரசின் அஜாக்கிரதை தான் காரணம் என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.