Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரிகார்டை நகர்த்தி வச்ச சீமான்…! வழக்கு போட்ட தமிழக போலீஸ்… தமிழ் இருக்காது என எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாலையில் வைத்த பேரிகார்டை கொஞ்சம் நகர்த்தி வைத்து விட்டோம், அதற்கு ஒரு வழக்கு, ஏதோ ஒன்று நடக்குது. தமிழ் மட்டுமில்லை, எல்லா மாநில மொழிகளும், எல்லா தேசிய இனங்களும் தாய் மொழிகளும் இருக்கப் போவதில்லை. அவர்களுடைய நோக்கமே ஹிந்தி, சமஸ்கிருதம் தான். இங்கிலீஷ் கூட கிடையாது.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவசாயிகளுக்கு நல்லது என்று சொல்லவேண்டியது தான். யாரு சாகிறார்களோ அவர்களுக்கு நல்லது என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. எங்கள் மொழியில் முன் நிறுத்துவதில் என்ன இருக்கு ? சமஷ்கிருதம், ஹிந்திக்கு வரலாறு இருக்குமா ? என்னுடைய இலக்கியம் இருக்குமா ?

என்னுடைய தாய் மொழி இருக்குமா ? அதெல்லாம் கட்டாயமாக மூன்றாம் வகுப்பு வரைக்கும்,  ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய் மொழியில் படிக்கலாம். பேரறிஞர் அண்ணா சொல்கிறார்,  ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு எல்லாம் அது ஒரு கடல், தமிழ் முதுகலை படித்து ஆய்வு படிக்கின்ற மாணவர்களே பொருள் தெரியாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்,

சிலப்பதிகாரத்திற்கும்,  கம்பராமாயணத்திற்கும் என்ன பொருள் என்று தெரியாமல், அந்த அளவிற்கு அது ஒரு கடல். அதை ஐந்தாம் வகுப்பு படித்துவிட்டால் போதும், ஆறாம் வகுப்புவரை படித்துவிட்டால் போதும் என்பதெல்லாம்… எதையாவது சொல்லிவிட்டு போறது தான் என விமர்சித்தார்.

Categories

Tech |