Categories
சினிமா தமிழ் சினிமா

நவம்பர் மாதம் வெளியாகும் படங்கள்…. பட்டியல் இதோ….!!

நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 4-ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலங்களில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழிக்க பலர் தேர்ந்தெடுக்கும் ஒன்று சினிமா. இதனால், திரையரங்குகளில் பல படங்கள் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும். அவ்வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக பல படங்கள் காத்திருக்கின்றன.

இந்நிலையில், நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும்  படங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு, ரஜினி நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. நவம்பர் 5ஆம் தேதி ஹாலிவுட் திரைப்படமான எடெர்னல்ஸ் மற்றும் நவம்பர் 19ஆம் தேதி அருண்விஜய் நடிக்கும் ‘பார்டர்’, சந்தானம் நடிப்பில் ‘சபாபதி’ சாந்தனு நடிக்கும் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

மேலும், நவம்பர் 25ஆம் தேதி சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி சசிகுமார் ‘நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா’ போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

Categories

Tech |