Categories
தேசிய செய்திகள்

MPக்கு பச்சை, MLAக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டு…. வெளியான அறிவிப்பு….!!!

குடியரசு தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்கும் எம்பி-களுக்கு பச்சை நிறத்திலும், எம்எல்ஏக்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்பட உள்ளது. வாக்கு மதிப்பு அடிப்படையில் எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். இந்த முறை ஒரு எம் பி யின் வாக்குமதிப்பு 700 ஆக உள்ளது. மேலும் எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

Categories

Tech |