திருவள்ளூர் மற்றும் ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார் .
டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை மனுவை கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மற்றும் ஆவடி வழியாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
அதனால் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறதுகின்றன . மேலும் சென்டிரலுக்கு வரும் பயணிகள் தங்கள் வீடுகளுக்கு சென்றடைய குறை ந்த பட்சம் 2 மணி நேரமாகின்றது. எனவே, பயணிகளின் பயண சிரமத்தை குறைப்பதற்க்காக ஆவடி மற்றும் திருவள்ளூர் செண்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்வதன் மூலம் பயணிகளின் நேரத்தை குறைப்பது மட்டுமின்றி தினமும் ஏற்பட கூடிய கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதுற்கு வழிவகுக்கிறது