டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீக்கப்பட்டாலும், ஒருசில தளர்வுகளுடன் கடைகளைத் திறக்கலாம் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில்,
டாஸ்மாக் கடைகளை திறக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
திமுக எம்பி கனிமொழி அவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசிடமிருந்து வேண்டிய நிதியை வாங்க முடியாத தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளை திறந்து பணம் வசூலிக்க நினைப்பதாகவும், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களிடமிருந்து வருவாயை பெற்றுக் கொள்ள நினைக்கும் இந்த மோசமான முடிவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்ப வன்முறையை அதிகரிக்கும் என்பதால் அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.