இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார்.
இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் எத்தனை படுக்கைகள் உள்ளன, என்னென்ன தேவை உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தேன். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் (PPE kits), சானிடைசர்களையும் வழங்கினேன்”.
பின்னர், “மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தபோது,கொரோனா சிறப்பு பிரிவு மின்தூக்கிக்காக (lift) நிதி தேவை என்று கோரிக்கை வைத்தனர்.ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில்,தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் அடக்கம். மேலும் இதுவரை ஒருவர் பலியான நிலையில் 6 பேர் குணமடைந்துள்ளனர்.
வழங்கினேன்.
பின்னர்,மருத்துவர்களுடன் கலந்தாலோசித்தபோது,கொரோனா சிறப்பு பிரிவு மின்தூக்கிக்காக (lift) நிதி தேவை என்று கோரிக்கை வைத்தனர்.ஏற்கனவே கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி அளித்திருந்த நிலையில்,தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 1, 2020