கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி.க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தமிழ், தெலுங்கு உட்பட மொழி படங்களில் நடித்தவர் நடிகை நவ்னீத் ராணா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நவ்னீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.வுமான ரவிராணா, குழந்தைகள் என குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து வீட்டில் இருந்த படியே நவ்னீத் ராணா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நவ்னீத் ராணா உடல் நலம் சரியாகாததால், சென்ற 6ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டார். அவருடன் கணவர் ரவி ராணாவும் மும்பை வந்துள்ளார். தற்போது லீலாவதி மருத்துவமனையில் நவ்னீத் ராணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.